இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 123 ஆண்டுகளாக நடைபெறுகிறது.
1896 - சிலாபம் கலகம் (முஸ்லிம் -கத்தோலிக்கர்).
1900 - அநாகரீக தர்மபாலவினால் தோற்றுவிக்கப்பட்ட ‘சிங்கள மகாபோதி சபை’ முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்தது.
1905.05.02 - யாழ்ப்பாண முஸ்லிம்.
சட்டத்தரணி அப்துல் காதர் என்பவர் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் (தொப்பியணிந்து) நீதிமன்றம் சென்றதால், நீதிபதியினால் நீதிமன்றிலிருந்து வெளியனுப்பப்பட்டார். ("துருக்கித் தொப்பி போராட்டம்" - இலங்கை முஸ்லிம்களின் முதலும் இறுதியுமான உரிமைப் போராட்டம்)
1915 - இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியான முதலாவது மதக் கலவரம் கண்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடுபூராகவும் இனவாதிகளால் முஸ்லிம்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டது.
1948 - இலங்கை பிரதமர் டி.எஸ். சேநாயக்க இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை பரம்பலை மட்டுப்படுத்த சிங்கள குடியேற்றங்களை முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களில் அமுல்படுத்தினார்.
1972 - மடவளை கலவரம்.
1974 - மஹியங்கன ‘பங்கரகம்மன’ எனும் முஸ்லிம் கிராமத்தில் கடைகள் பள்ளிவாயல்கள் வீடுகள் எரிக்கப்பட்டன.
1976 - இல் புத்தளத்தில் பள்ளிவாயில் புகுந்து ஏழு முஸ்லிம்களை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.
1980 - கொம்பனித்தெரு பள்ளிவாயலில் ஒரு முஸ்லிம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1982 - காலி துவவத்தை’யில் முழுக்கிராமமே விரட்டியடிக்கப்பட்டது.
1985.08.07 - மன்னாரிலுள்ள அளவக்கைப் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட படுகொலை
1985 - ஏறாவூரில் தமிழ்-முஸ்லிம் கலவரம்
1989 - சம்மாந்துறை தமிழ்-முஸ்லிம் கலவரம்
1989 - அறுப்பளை பள்ளி கலவரம்
1990.07.12 - புனித ஹஜ் கடமையை முடித்துக் கொண்டு திரும்பிய 68 முஸ்லிம்களை குருக்கள்மடம் பகுதியில் புலிகள் வழிமறித்து கொன்று புதைத்தனர்.
1990.07.30 - அக்கறைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1990.08.01 - ('சிகப்புஆகஸ்ட்' ஆரம்பம்)
அக்கரைபற்றில் 8 முஸ்லிம்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
1990.08.03 - காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை - முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது 25 குழந்தைகள் உட்பட 147 பேர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
1990.08.05 - அம்பாறை முல்லியன்காட்டில், 17 முஸ்லிம் விவசாயிகள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
1990.08.06 - அம்பாறையில் 33முஸ்லிம் விவசாயிகள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
1990.08.12 - சமாந்துரையில் 4 முஸ்லிம் விவசாயிகள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
1990.08.12 - ஏறாவூர் படுகொலை - ஏறாவூர் எல்லைப்புற கிராமங்களுக்குள் புகுந்த புலிகள் 36 பெண்கள், 60குழந்தைகள் உட்பட 129 பேரை படுகொலை செய்தனர்.
1990.08.13 - வவுனியாவில் 9 முஸ்லிம்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
1990.08.15 - அம்பாறை அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றிற்க்குள் புகுந்த புலிகள் 9 முஸ்லிம்களை சுட்டுக் கொண்டனர்.
1990.09. - புலிகளால்
50 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும், வியாபாரிகளும் கப்பம் கேட்டு கடத்தப்பட்டனர் . கோடிக் கணக்கில் கப்பம் பெற்றபின் சிலர் விடுதலை செய்யப்பட, பலர் கொல்லப்பட்டனர்.
1990.10.- - யாழ்ப்பாணம், மன்னார் , முல்லைத்தீவு ,கிளிநொச்சி மற்றும் வவுனியாவின் பல ஊர்களில் இருந்து
வடக்கு முஸ்லிம்கள் 72000 பேர் உடுத்திருந்த உடையுடன் உடமைகளைல்லாம் கைவிட்டு சொந்த ஊரிலிருந்து துப்பாக்கி முனையில் உடுத்த உடையையும் மானத்தையும் தவிர அனைத்தையுமே பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலையில் புலி பயங்கர வாதிகளால் வெளியேற்றப்பட்டனர்
1992.04.29 - அழிஞ்சிப்பொத்தான தாக்குதல் - புலிகளால் 56 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.
1992.07.15 - கிரான்குளத்தில் புலிகளால் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து 22 முஸ்லிம்கள் இறக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
1992.10 15 - பள்ளியகொடள்ள படுகொலைகள் - புலிகளினால் அக்பர்புரம், அஹமட்புரம் ஆகிய கிராமங்களில் சுமார் 187 பேர் கொல்லப்பட்டனர்.
1994 - உக்ரஸ்பிட்டி கலவரம்
1997 - பேராதனை பள்ளி கலவரம்
1998 - கண்டி லைன் பள்ளி பிரச்சினை
1998 - கலகெதர-மடிகே கலவரம்
1998.05.02 - வெலிமட கலவரம்
1998.05.08 - திக்குவெல்லை கலவரம்
1999.02.14 - நொச்சியாகம கலவரம்
1999 - பன்னல அலபட வன்முறைகள்
1999 - மீயெல்ல கலவரம்
1999 - பதுளை ஹிஜாப் பிரச்சினை (தமிழ் -முஸ்லிம்)
2000.07.19 - வெல்லம்பிட்டி கலவரம்
2000.08.17 - பள்ளேகம கலவரம்
2000.09.16 - தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் (மர்மமான)விமான விபத்தில் உயிர் நீத்த நாள் - இலங்கை முஸ்லிம் மக்கள் மீண்டும் அநாதையாக்கப்பட்ட நாள்
2000.12.04 - திஹாரி கலவம்
2000.12.15 - கொப்பேய்கன கலவரம்
2001.04.16 - வட்டெதனிய கலவரம்
2001.04.20 - மாவனல்லை கலவரம்
2001 - காலி-கட்டுகொடை கலவரம்
2002.07.31 - கொட்றா முல்லை கலவரம்
2002.10.25 - மாளிகாவத்தை கலவரம்
2002.11.17 - மதுரங்குழி கலவரம்
2002 - பேருவளை மோதல்கள் இடம் பெற்றன.
2005.12.05 - மருதமுனையில் அன்றிரவு 2 முஸ்லிம் மீனவர்கள் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
2006.08.04. - மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம் - வெளியேற்றத்திற்கு மூன்று நாட்கள் முன், புலிகள் இராணுவத்தை தாக்குவதற்காக மூதூர் முஸ்லிம் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இதனால், அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களும், உடமைகளும் திட்டமிட்டு அழிக்கப்பட்டதோடு, ஊரைவிட்டு வெளியேறவும் நிர்பந்திக்கப்பட்டனர். பின்பு வெளியேறிக் கொண்டிருந்தவர்களையும் வழிமறித்து தங்கள் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர் புலிகள். அதன்போது, இராணுவத்தினால் புலிகள் மீது நடாத்தப்பட்ட செல் தாக்குதலில் திட்டமிட்டபடி அகதி முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். பின்பு தப்பி ஓடியவர்கள் சதுப்பு நிலங்களில் சேற்றினுள் புதையுண்டு இறந்தனர்.
2009.03.10 - மாத்தறை அகுரஸ்ஸ'யில் மீலாதுன் நபிவிழா நிகழ்வில் புலிகளினால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
2011.09. - அநுராதபுரம் மாவட்டம் ஒட்டுப்பள்ளம் பகுதியிலிருந்த பல நூற்றாண்டு பழமை வாய்ந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான இஸ்லாமிய பெரியாரின் அடக்கஸ்தலம் உள்ளிட்ட நினைவு சின்னங்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் இடித்து தகர்க்கப்பட்டது.
2011.11.09 - மட்டக்களப்பு கள்ளியங்காடு முஸ்லிம் கொலணியில் பல ஆண்டு காலமாக இருந்து வந்த 'பிர்தெளஸ்' பள்ளிவாயல் 'பிரம்மகுமாரிகள்' நிலையமாக மாற்றப்பட்டது.
2012 - முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்வதை மட்டுமே குறியாகக் கொண்ட "பொதுபல சேனா" என்ற கடும்போக்கு இனவாத அமைப்பு அரசின் ஆசியுடன் உதயமானது.
2012 - மன்னார், முசலி முஸ்லிம் கிராமங்களின் மீள் குடியேற்றப் பிரச்சனை - விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டு, அகதிகளாக்கப்பட்ட மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி மற்றும் கொண்டச்சி முஸ்லிம்கள், யுத்தம் முடிந்த பின் தமது பிரதேசத்திற்க்கு மீள்குடியேற்றப்பட வேண்டிய நிலையில், குறித்த பகுதிகளை அரசு வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு சொந்தமானது என வர்த்தமானியில் அறிவித்து, மக்களை மீண்டும் அகதிகளாக்கியது.
2012.04.20 - தம்புள்ள நகரில் அமைந்துள்ள ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளானது. தம்புள்ள ரங்கிரி ரஜமகா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவ சுமங்கள தேரரின் தலைமையிலான குழுவொன்று பேரணியாக வந்து இத்தாக்குதலை நடத்தியது.
2012.05.25 - தெஹிவளை கல்விஹாரை வீதியில் உள்ள தாருர் ரஹ்மான் பள்ளிவாசலை அகற்றுமாறு கோரி பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு பள்ளிவாசலை தாக்கும் முயற்சியும் மேற் கொள்ளப்பட்டது.
2012.05.28 - குருநாகல் மாவட்டம் ஆரிய சிங்களவத்தையில் அமைந்துள்ள உமர் இப்னு கத்தாப் குர்ஆன் மதரஸாவில் தொழுகை நடத்துவதை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது.
2012.07.24: - குருநாகல் மாவட்டம் தெதுரு ஓயாகம தாருல் அக்ரம் தக்கியாவில் இரவு நேரத் தொழுகையை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு தொழுகை நடத்தவது நிறுத்தப்பட்டது.
2012.07.26 - கொழும்பு மாவட்டம் தெஹிவளை பீரிஸ் மாவத்தையிலுள்ள தாருல் அக்ரம் குர்ஆன் மத்ரஸாவில் தொழுகை நடாத்தவதை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக நிறுத்தியது.
2012.07.29 - கொழும்பு மாவட்டம் ராஜகரிய ஒபே சேகரபுரயிலுள்ள ஜாமிஉத் தாருல் ஈமான் பள்ளிவாசலில் இரவு நேரத் தொழுகை நடாத்துவதற்கு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது.
2012.08.30 - கொழும்பு மாவட்டம் வெல்லம்பிட்டி கொகிலாவத்தை பள்ளிவாசலினுள் நுழைந்த சில பௌத்தர்கள் பள்ளிவாசலை தாக்கப் போவதாக எச்சரித்தனர்.
2012.10.27 - அநுராதபுரம் மாவட்டம் மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலுக்கு பௌத்த தீவிர வாதிகளினால் தீவைக்கப்பட்டது.
2012.11.30 - கொழும்பு மாவட்டம் மஹரகம நாவின்ன ரஜமகா விகாரையில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரணியொன்று இடம்பெற்றது. கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதிகளினால் பௌத்த மரபுச் சின்னங்கள் அழிக்கப்படுவதாக பொய் கூறியே இப்பேரணி இடம்பெற்றது.
2012.12.03 - கண்டி மாவட்டம் குண்டகசாலை விவசாய கல்லூரியில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு வேண்டுமென்றே பன்றி இறைச்சி கறி பரிமாறப்பட்டது.
2012.12.08 - கண்டி மாவட்டம் கண்டி மாநகரத்தில் முஸ்லிம் வியாபரிகளுக்கெதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு கைபேசிகள் வழியாக எதிர்ப்பு குறுங்செய்திகளும் அனுப்பப்பட்டன.
2012 .12.23 - இரத்தினபுரி மாவட்டம் எம்பிலிபிட்டியவில் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் பௌத்த தீவிர வாதிகளினால் தாக்கப்பட்டனர். அதே இடத்தில் 24ஆம் திகதி முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.
2012.12.24 - பதுளை மாவட்டம் மஹியங்கனையில் அமைந்தள்ள பள்ளிவாசலை மீள் நிர்மாணம் செய்ய வேண்டாம் என்று பௌத்த தீவிரவாதிகளினால் சுவரொட்டி ஒட்டப்பட்டதோடு துண்டுப் பிரசுரமும் வெளியீடு செய்யப்பட்டது.
2013.01.07 - அநுராதபுரம் மாவட்டம் மல்வத்து ஓயா லேனில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்பாட்டம் செய்யப்பட்டது.
2013.01.07 - கொழும்பு மாவட்டம் சட்டக் கல்லுரிக்கு தெரிவான முஸ்லிம் மாணவர்களை குறைக்குமாறு கோரி கொழும்பு சட்டக்கல்லூரிக்கு முன்னால் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
2013 .01.19 - கொழும்பு மாவட்டம் மஹரகம நகரில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான பிரபல ‘நோலிமிட்’வர்த்தக நிலையத்தை மூடுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அதனை தாக்கி அழிப்பதற்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.
2013.01.20 - அநுராதபுர மாவட்டம் புதிய நகரத்தில் முஸ்லிம்களுக்கெதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு துண்டுப்பிசுரமும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் ஹோட்டல்களில் சிங்களவர்களக்கென தயாரிக்கப்படுகின்ற உணவுகளில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் இரசாயனம் சேர்க்கப்படுவதாகவும் ஆதலினால் முஸ்லிம் ஹோட்டல்களில் உணவருந்துவதை அவசியம் நிறுத்துமாறும் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று பரப்பப்பட்டது.
2013.01.22 - கொழும்பு புதிதாக நிர்மாணிக்கப்படும் அனைத்துப் பள்ளிவாசல்களும் ஜிஹாதின் பாசறைகளென பொது பலசேனா அமைப்பினால் எச்சரிக்கப்பட்டது.
2013.01.23: களுத்துறை மாவட்டம் பேருவளையில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டலில் பௌத்த குருமார் தாக்குதலை மேற்கொண்டு சேதப்படுத்தினர்.
2013.01.24 - குருநாகல் மாவட்டம் குளியாபிட்டியில் முஸ்லிம்களுக் கெதிரான ஆர்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. இதன் போது பன்றியின் உருவத்தில் 'அல்லாஹ்' என்ற வரைந்து எடுத்துச் செல்லப்பட்டது.
2013.02.01 - கண்டி மாவட்டம் கண்டி 'சித்தி லெப்பை மாவத்தை' ( பெயர் பலகை மைபூசி அழிக்கப்பட்டு)‘வித்தியார்த்த மாவத்தை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2013.02.07 - 2013ஆம் ஆண்டை’ஹலால்’ ஒழிப்பு ஆண்டாக பிரகடனப் படுத்தியுள்ளதாக பொது பலசேனா அமைப்பு அறிவித்தது. தமது செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுவதற்கு 'இலங்கை ஜனாதிபதி ஆசிர்வாதம்' வழங்கியதாகவும் தெரிவித்தது.
2013.02.09 - குருநாகல் மாவட்டம் வரக்காபொலயில் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
2013.02.10 - குருநாகல் மாவட்டம் நாரம்மல ஹொரம்பாவ பகுதியில் ஸுபஹ் தொழுகைக்காகச் சென்ற ஒருவர் தாக்கப்பட்டார்.
2013.02.11 - குருநாகல் மாவட்டம் இரம்புக்கனை பிரதேசத்தில் ‘ஹலால்’ எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
2013 .02.11 - குருநாகல் மாவட்டம் நாரம்மல நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு ‘பர தம்பியாவுக்கு மார்ச் மாதத்திற்குள் மரணம்’ என்னும் தலைப்பில் அச்சுறுத்தல் கடிதம் கிடைக்கப்பெற்றது. இக்கடிதம் பௌத்த அமைப்புக்களின் ஒன்றியம் என்னும் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது.
2013.02.12 - சிங்கள பௌத்தர்களை ‘இறப்பர் தோட்டத்திலுள்ள’ இறப்பர் மரங்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களை அத்தோட்டத்தில் வளர்க்கப்படும் சிறிய செடிகளுக்கு ஒப்பிட்டு பொது பல சேனா பகிரங்கமாக கருத்து தெரிவித்தது.
2013.02.13 - குருநாகல் மாவட்டம் நாரம்மல பொலிஸ் பரிவில் சியம்பலாகஸ்கொடுவ கிளின்பொலயில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் உடைக்கப்பட்டன.
2013.02.14 - "எதிர்வரும் புத்தாண்டிற்கு முன்பு‘ஹலால்’ அங்கீகாரம் ஒழிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பௌத்த புரட்சி வெடிக்கும்" என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்கயினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
2013.02.14 - கண்டி மாவட்டம் திகனப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிரான துண்டுப் பிரசுரம் பொது பலசேனா அமைப்பினால் விநியோகிக்கப்பட்டது.
2013.03.04 - மஹர சிறைச்சாலை வளாகத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீதும் ஓப்பநாயக்க பள்ளிவாசல் மீதும் இனந்தெரியாதோரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
2013.03.11 - பொதுபலசேனாவின் சூழ்ச்சியினால் "ஹலால் உள்நாட்டுக்கு இல்லை .வெளிநாட்டுக்கு மட்டும்" என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையால் அறிவிக்கப்பட்டது.
2014.06.16 - அளுத்கம கலவரம் - பேரணி என்ற பெயரில் வலம் வந்த பொதுபலசேனா இனவாத அமைப்பினரால் அப்பாவி முஸ்லிகள் மீது மிலேச்சத்தனமாக , பொலிஸார் முன்னிலையிலேயே தாக்குதல் நடாத்தப்பட்டது. 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் 80ற்க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக்கே வித்திட்டே பெரும்கலவரம் இது என்பது குறிப்பிடத் தக்கது.
2014.12.05 - திருக்கோவில் வட்டமடு பிரதேசத்தில் மூன்று முஸ்லிம் விவசாயிகள் ஒருசிலரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
2015.02 22 - அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் அவரது சொந்த தொகுதியான பொலன்னறுவைக்குட்பட்ட ஒரு சிற்றூரான போகஹதமனயில் குர்ஆன் மதரசா ஒன்று இனவாதிகளால் தரைமாக்கப்பட்டது.
2015.05.30 - அன்று கொழும்பு பொரலையில் அமைத்துள்ள ஜாமியுல் அல்பார் ஜும்ஆ மஸ்ஜித் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.
2015.07.07 - அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள மணிகூண்டு கோபுர உச்சியில் திடீரென பௌத்த தூபி ஸ்தாபிக்கப்பட்டது. முஸ்லிம் மக்கள் ஊமை கண்ட கனவு போல இருந்தார்கள்.
2015.07.16 - இப்பாமுகவ, பக்மீகொல்ல ஜும்ஆ பள்ளிவாசலுக்கு தராவீஹ் தொழுகைக்குச் சென்ற மூன்று இளைஞர்கள் வாலினால் வெட்டப்பட்டனர். இதன்போது இன்னும் மூன்று இளைஞர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது.
2015.09.06 - ஹெம்மாத்தகமையில் SLTJ யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்று மத அன்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில், இடைநடுவில் பொதுபல சேனாவின் உறுப்பினர்கள் தலையிட்டு நிகழ்ச்சியை நிறுத்தி கொலை அச்சுறுத்தல் விடுத்து அங்கிருந்த மார்க்க விளக்க புத்தகங்களையும் அபகரித்துச் சென்றனர்
2016.01.07 - வெல்லம்பிட்டி, பொல்வத்தை மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசலில் இஷா தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடு திரும்பிய முஸ்லிம்கள் மீது “சிங்க லே” என கோஷமிட்டவர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினார்.
2016.03.13 - வத்தளை, வெலிசர 20 அடி பாதை வீதியில் மஸ்ஜித் நிர்மாணப் பணிகளுக்கு தடை உத்தரவு பிறபிக்கப்பட்டமை.
2016.03.16 - மகிந்தவின் ஆட்சி காலத்தில் பிரச்சினை ஏற்பட்டு சுமூகமாகத் தீர்க்கப்பட்ட பலாங்கொடை ஜீலானி (கூரகள) பள்ளிவாசலை இந் நல்லாட்சியில் அகற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவையும், பொலிசாரின் உத்தரவையும் மீறி இனவாத சிங்கள ராவய அமைப்பு ஆயுதங்களுடன் பிரவேசித்து அச்சுறுத்தல் விடுத்தனர்.
2016.05.28 - கொழும்பு – கண்டி பிரதான வீதி, நெலுந்தேனிய பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.
2016.06.04 - அம்பாறை நகரில் கூடிய பௌத்த பிக்குகள் மலேகாலனியில் புதிதாக கட்டப்பட்டு வந்த பள்ளிவாசல்களை தடை செய்தனர்.
2016.06.07 - தலதா மாளிகைக்கு 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கண்டி லைன் பள்ளி வாசலின் மினாரா (கோபுரம்) நிர்மாணப் பணிகள் தடை செய்யப்பட்டது.
2016.06.16 - வரகாபொல பள்ளிவாசலின் மினாரத்தை வரகாபொல தேவகிரி விகாரையை விட உயரமாக கட்டக்கூடாதென்று பெளத்தர்களால் பலத்த அச்சுறுத்தல் விடப்பட்டது.
2016.07.01 - அக்குரணை, அளவத்துகொடை பிரதேசத்தில் மல்கம்மந்தெனிய ஜும்மா பள்ளிவாசலுக்கருகில் முச்சக்கர வண்டியில் வந்த இனவாதிகள் பன்றியின் உடற்பாகங்களை வீசி விட்டு தப்பியோடினர்.
2016.07.16 - ஹபுகஸ்தலாவையில் அமைந்துள்ள அல் ஹாமிதியா அரபுக் கல்லூரியின் 3 பேஸ் மின்மானியும் (ட்ரான்ஸ்போர்மர்) தண்ணீர் கொள்கலனும் (பவ்சர்) இனவாதிகளினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
2016.08.06 - பொரலஸ்கமுவ பள்ளிவாசலுக்குள் புகுந்த இனவாதிகள் அங்கு தாக்குதல் நடத்தி பொருட்களுக்கும் சேதம் விளைவித்தனர்.
2016.08.08 - தெஹிவளை, பாத்தியா பள்ளிவாசலின் விஸ்தரிப்பிற்கு நல்லாட்சியில், பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டு முஸ்லிம்களின் ரமலான் மாத தாராவிஹ் தொழுகை கூட தடைப்பட்டமை.
2016.08.21 - அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மாநகர எல்லைக்கு உட்பட்ட புட்டம்பை மஸ்ஐிதுல் ஜலாலீயா பள்ளிவாசல் தமிழ் இனவாதிகளினால் தாக்கப்பட்டது.
2016.08.24 - ஹிரியுல்ல கல்வி வலயத்திற்குட்பட்ட மும்மான முஸ்லிம் வித்தியாலயத்திற்க்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தைக் பெரும்பான்மை இனத்தவர்கள் கைப்பற்ற வேண்டும் எனக் கூறி இனவாதிகள் முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்களை புறக்கணிக்குமாறு வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து , துண்டுப்பிரசுரங்களும் விநியோகித்தனர்.
2016.08.26 - முஸ்லிம் ஊடகவியலாளர் (BBC மற்றும் சுயாதீன) பர்ஹான் நிசாமுத்தீன் காலி – தளாபிட்டிய, அப்துல் வஹாப் மாவத்தையில் வைத்து வாளால் வெட்டி தாக்கப்பட்டார்.
2016.09.05 - யாழ். பல்கலைகழக முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
2016.09.12 - பெல்மடுல்ல, பஞ்சன்கொடவில் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று குர்பான் கொடுப்பது அன்று முதல் தடைசெய்யப்பட்டது.
2016.09.17 - கல்ஹின்ன பள்ளியின் மீதும் அதற்கருகிலுள்ள முஸ்லிம் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தி அவர்களுக்கு சொந்தமான வாகனங்களும் இனவாதிகளினால் சேதமாக்கப்பட்டன.
2016.09.22 - அளுத்கமையில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான மல்லிகாஸ் புடவை வர்த்தக நிலையம் தீயிட்டு சாம்பலாக்கப்பட்டது.
2016.10.02 - மாதம்பை முஸ்லிம்களின் காணிகளை சுவீகரிப்பு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2016.11.03 - சின்ஹலே என்ற அமைப்பினர் பகிரங்கமாக ஊடகங்கள் முன்னிலையில் முஸ்லிம்களை கொலை செய்வோம் என அச்சுறுத்தல் விடுத்தனர்.
2016.11.04 - தெலியாகொன்ன பள்ளிவாசல் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.
2016.11.06 - நிகவரெட்டிய பள்ளிவாசல் ஒன்றின் மீது 6 பெற்றோல் குண்டுத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டது
2016.11.15 - தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாயல் தாக்கப்பட்டது.
2016.11.15 - முஸ்லிம்கள் வாழும் பகுதியான மாளிகாவத்தை இரத்த ஆறாக ஓடும் என, ஞானசார எச்சரித்தான்.
2016.11.18 - இலங்கையிலிருந்து சிரியா சென்ற 32 முஸ்லிம்கள் ISIS அமைப்பில் இணைந்து கொண்டதாக நீதியமைச்சர் விஜயதாச பொய்யான குற்றச்சாட்டை பாராளுமன்றில் முன்வைத்தார்.
தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், சுன்னத் வல்ஜமாஅத், ஜாமாதே இஸ்லாமி ஆகிய அமைப்புக்களையும் பகிரங்கமாக விமர்சித்தார்.
2016.11.19 - சிங்கள இனவாத இயக்கங்கள் பிரபல முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களான NOLIMIT, FASHIONBUG மற்றும் ETISALAT ஆகியவைகளுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டு, முஸ்லிம்களின் வர்த்தகத்திற்க்கு எதிரான பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. அதன்போது கண்டி லைன் பள்ளியின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டு பெளத்தகொடி ஏற்றப்பட்டதுடன் துண்டுப்பிரசுரம் வெளியாகி சிலமணி நேரங்களில் FASHIONBUG தீக்கிரையானது.
2016.11.25 - களுத்துறை, மஹா ஹீனட்டியங்கல பிரதேச பள்ளிவாசல் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.
2016.12.01- திருகோணமலை பனிச்சங்குளம் சின்னப் பள்ளிவாசலுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் 42 குர்ஆன் பிரதிகளை தீயிட்டு எரித்தனர்.
2016.12.06 - முல்லைத்தீவு வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தண்ணீரூற்று மு.ம.வித்தியாலயத்தில் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவிகள் பர்தா அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
2016.12.06 - முள்ளிப்பொத்தான சிங்கள மகா வித்தியாலயத்தில் சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவர்கள் பரீட்சை எழுதுவது தொடர்பாக திடீர் என பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளர்கள் பிரச்சனைப்படுத்தினர்.
2016.12.18 - பாணந்துறை பாலிகா பாடசாலையில் சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள், மேற்பார்வையாளரால் பர்தா கழற்றுவதற்க்கு வற்புறுத்தப்பட்டதோடு, மறுநாள் பரீட்சைக்கு பர்தா அணியாமல் வரும்படியும் வலியுறுத்தப்பட்டது.
2016.12.29 - திருக்கோவில் பிரிவிலுள்ள, பொத்தானையில் தொள்பொருள் ஆராய்ச்சிப் பிரதேசம் என, 250 வருடங்கள் பழமையான அமீருல் ஜப்பார் ஹமிதானி பள்ளிவாயல் பிரதேசம் பிரகடனம் செய்யப்பட்டு, வெளியார் எவரும் (முஸ்லிம்கள் கூட) பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டது.
2017.01.18 - ஏறாவூர், தாமரைக்கேணியில் அக்ஸா மஸ்ஜித் எனும் சிறிய பள்ளிவாயல் உடைத்தெறியப்பட்டு தீவைக்கப்பட்டது.
2017.01.21 - கண்டி, கெலிஓய பிரதேசத்தில் பள்ளிவாயல் கட்டவிருந்த (முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான) காணியில் திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டு சர்ச்சை ஏற்படுத்தப்பட்டது.
2017.02.09 - தம்புள்ளை நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை மூடுமாறு சிங்கள காடையர் குழுவொன்றினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு முஸ்லிம் கடைகள் மூடப்பட்டன.
2017.03.21 - பொலன்னறுவையில் முஸ்லிம் கொலனியில் நல்லமுறையில் இயங்கிக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான 150 அரிசி ஆலைகள் இழுத்து மூடப்பட்டன.
2017.03.22 - கொழும்பிலிருந்து நொச்சியாகம வரை சென்ற பிக்குமார்கள் முஸ்லிம்களுக்கு பலவாறும் அச்சுறுத்தல் விடுத்தனர்.
2017.03.30 - முசலி பிரதேச முஸ்லிம்களின் வாழிடங்களை உள்ளடக்கி ஒரு லட்சம் ஏக்கர் காணியை வன இலாக்காவுக்காக ஒதுக்கி வர்த்தமானி வெளியிடப்பட்டது.
2017.04.18 - கொடப்பிட்டிய போர்வை நகரில் முஸ்லிம்களின் கடைகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.
2017.04.18 - காலி, கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள ஸியாரம் ஒன்றின் பாதுகாப்பு மதில் சேதமாக்கப்பட்டது.
2017.05.16 -மூதூர் – செல்வநகர் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் காணியை, விகாரைக்கு சொந்தமான காணி என்று கூறி பிக்கு ஒருவர் அபகரித்துக் கொண்டார்.
பின், இனந்தெரியாத நபர்களினால் வீடுகளுக்கு கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டு, அந்த பகுதியில் இருந்து சுமார் 1000-1200 முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
2017.10.29 - கிரான் சந்தையில் வியாபாரம் செய்து வந்த முஸ்லிம் அங்காடி வியாபாரிகள் அங்கிருந்து துரத்தப்பட்டனர்.
2017.11.17 - காலி, கிந்தோட்டை வன்முறை - பெளத்த பிக்குகளின் தலைமையில் முஸ்லிம் மக்களின் மீது திட்டமிட்டு வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. பெருமளவிலான சொத்துக்களும், உடமைகளும் சேதமாக்கப்பட்டன.
2018.02.23 - சிங்கள காடையர்களால் அம்பாறை பள்ளிவாயல், மற்றும் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டன.
2018.03.05 - கண்டிக் கலவரம் (திகண-தெல்தெனிய) - சமூக வலைத்தளங்களின் உதவியுடனும், இனவெறி பிடித்த சில பெளத்தமதகுருக்களின் தலைமையிலும், பொறுப்பில்லாத பாதுகாப்பு படையின் கண்காணிப்புடனும் கண்டி முஸ்லிம்கள் மீதும் அவர்களின் சொத்துக்கள், பள்ளிவாசல்கள் மீதும் வெறித்தனமாக தாக்குதல் நடாத்தப்பட்டது.
2019 மே 13/14 - பௌத்த காடையர் குழு குருநாகல் மாவட்டத்தில் உள்ள பல முஸ்லீம் கிராமங்கள் நீர்கொழும்பு , சிலாபம் மினுவாங்கொட ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் சொத்துக்களின் மீது தாக்குதல் . 457 முஸ்லீம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன .147 வீடுகள் ,132 கடைகள் ,52 வாகனங்கள் ,29 பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டன .முஸ்லீம் ஒருவர் கொல்லப்பட்டார்.
No comments:
Post a Comment