இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மொழி, அரசியல் சம்பந்தமான விடயங்களில் சில வேறுபாடுகள் இருந்தாலும், முருகனும், கண்ணகி(பத்தினி)யும் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் பொதுவாக, இரண்டு இன மக்களும் உரிமையோடு சொந்தம் கொண்டாடும் தெய்வங்களாக, வழிபாட்டு முறைகளாக இன்றும் உள்ளன. இலங்கையில் எல்லாப் பகுதிகளிலும் தமிழ் பெண்தெய்வம் கண்ணகிக்குக் கோயில் உண்டு.
கோவலனைக் கொன்றதால் கோபமுற்ற சிலப்பதிகார நாயகி, மதுரையை எரித்தவுடன் தொடர்ந்து அங்கு வாழப் பிடிக்காமல் தேவமகளாகி கடலைக் கடந்து கிழவியுருவில் இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கிய பின்னர் கடைசியாக வற்றாப்பளை என்று அழைக்கப்படும் வன்னியிலுள்ள பத்தாம் பளையில் தங்கி இளைப்பாறியதாக வரலாறுகள் கூறுகின்றன.
கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட கயவாகு மன்னன், சேரன் செங்குட்டுவனின் அழைப்பையேற்று சிலப்பதிகார அரங்கேற்றத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது கண்ணகியின் சிலம்பையும், பிரம்பையும் சேரன் செங்குட்டுவனிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்து, தமிழ்நாட்டில் அக்காலத்தில் வழக்கிலிருந்த கண்ணகி வழிபாட்டை இலங்கையிலும், பரப்பினான். கயவாகு மன்னன் கண்ணகிக்குச் சிலையெடுத்த விழாவில் கலந்து கொண்டதை “கடல் சூழ் இலங்கைக் கயவாகு” என்று சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்படுகிறது.
கண்ணகியின் ஆபரணங்கள் ஊர்வலம்
“இலங்கை மன்னன் கஜபாகு கண்ணகி சிலைகளையும் காற்சிலம்புகளையும் சேரன் செங்குட்டுவனிடமிருந்து பெற்றுக் கொண்டு தனது பரிவாரங்களுடன் யாழ்ப்பாணத்தின் மாதகலுக்கு அருகேயுள்ள புகழ்பெற்ற சம்புகோளம் என்ற துறைமுகத்தில் வந்திறங்கினான்.. இலங்கையில் இம்மன்னனால் நிறுவப்பட்ட முதலாவது கண்ணகி ஆலயம் யாழ்ப்பாணம் திருவடிநிலைக்கு அருகாமையில் உள்ள அங்கணாக் கடவையில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து அனுராதபுரத்துக்கு பூநகரி வழியாகச் செல்லும் பாதைகளில் உள்ள ஊர்களில் கண்ணகிக்கு ஆலயங்கள் அமைத்தான் என யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது. அடையாளம் காணமுடியாத அங்கணாக் கடவை கோயில் தற்போது கந்தரோடையில் உள்ள கண்ணகி கதிரமலைக் கருகாமையில் இருந்ததாகவும் சரித்திர வல்லுனர்கள் கூற்று.”
தமிழ்ப்பெளத்தர்கள் இலங்கைக்கு வந்து எலு/பாளி/சமக்கிருத/தமிழ்க்கலப்பினால் சிங்கள மொழியை உருவாக்கியவர்கள் சிங்களவர் என்ற தனியடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்கள் நாளடைவில் சிங்களவராக மாறியவர்கள் தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக தமிழ் போற்றிய சைவ மரபு வழி பின்பற்றி முருகனும், கண்ணகி (பத்தினி) , பெருமாளையும் தங்களின் தெய்வங்களாக இன்று வரை போற்றி ஏற்று வழி படுகின்றாா்கள் தமிழர்களுடன் மொழியால் பிாிந்தும் சைவ நெறியால் இரண்டற கலந்தே வாழ்கின்றனர்பெளத்த சைவ சிங்கள மக்கள்.
பெளத்தத்துக்கு மதம் மாறாமல், சிவத் தமிழர்கள் என்ற தமது பூர்வீக அடையாளத்துடன், தமிழர்கள் வடக்கு (யாழ்ப்பாணம்) நோக்கி நகர்ந்தனர். அதனால் தான் இன்று சிங்களவர்கள் தமிழர்களை விடப் பெரும்பான்மையாக உள்ளனர். வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல இலங்கை முழுவதும் காணப்படும் பெளத்த விகாரைகளும், அகழ்வாராய்ச்சி ஆதாரங்களும் வெறுமனே சிங்களவர்களுடையவை மட்டுமல்ல, பெளத்தத்தைத் தழுவிய தமிழ்ப்பெளத்தர்களுக்கும் சொந்தமானவை.
மதுரையை எரித்துக் கோபமுற்ற கண்ணகியை குளிர வைக்க குளிர்த்திப் பாடல்கள் பாடி பொங்கலும் வைத்து குளிர்த்தி விழாக்கள் சிறப்பாக இலங்கை முழுவதும் கொண்டாடப்படுகின்றன.
கண்ணகி அல்லது பத்தினி அம்மன் ஆலயத்தை ௫00 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகேயரால் மடுமாதாவாக உருமாற்றம் செய்யப்பட்டது . இன்று மன்னார் மருதமடுவில் மடுமாதா Cஹுர்ச்ஹ் என அழைக்கப்படும் கத்தோலிக்க Cஹுர்ச்ஹ் உண்மையில் தமிழர்கள், கண்ணகியம்மன் எனவும் சிங்கள பெளத்தர்கள் பத்தினித்தெய்யோ (தெய்வம்) என்று போற்றும் தமிழ் பெண்தெய்வம் ஆலயமாகும்.
தமிழ்நாட்டில் கண்ணகியைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் அற்றுப் போனாலும், ஈழத்தில் தமிழர்களும், சிங்களவர்களும்,(சிறப்பாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்) கண்ணகியைக் கடவுளாகவும், இலங்கையின் காவல் தெய்வமாகவும் இன்றும் வணங்கி வருகின்றாள்.
சிங்களத்தில் இராசாவளி பத்தினி கதா கஜபாகு கதா சிலம்பு கதா பத்தினி தெய்யோ பத்தினி எனப் பலவுள்ளன."“தென்னம் பழஞ்சொரியத் தேமாங் கனியுதிரவன்னி வழிநடந்த மாதே குளிர்ந்தருள்வாய் வாளை எடுத்து வளமுலையைத் தானரிந்து தோளாடை யாகத் துணிந்தாய் குளிர்ந்தருள்வாய்"என்று பாடிக் கண்ணகியை குளிரச் செய்வர்.
தொகுப்பு அருளகம்.
No comments:
Post a Comment