Followers

Tuesday, 10 August 2021

சாதியப் பிரச்சனை சைவ சமயத்தால் உருவானதல்ல.

 " அன்பே சிவமாக ", “ யாதும் ஊரே யாவரும் கேளிர் ” எல்லா ஊரும் எம் ஊர் , எல்லா மக்களும் எம் உறவினரே என்றும் அன்புதான் சிவமாக ,உயிர் நேயம் பேசி , தவமே வாழ்வாக வாழ்தலே வழிபாடுகளாக கொண்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

திருவள்ளுவர் திருக்குறளில் சாதி என்பது என்ன என்பதை தெள்ளத்தெளியத் தெரிவிக்கிறார். 

“ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் 

இழிந்த பிறப்பாய் விடும்".

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும் என்பதே விளக்கம் ஆகும்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்”

எவர்குடி (குடும்பம்) ஒழுக்கமுடைய குடியோ அவர்குடி உயர்குடியாகும், எவர்குடி ஒழுக்கமற்ற குடியோ அவர்குடி தாழ்குடியாகும் - இது பரம்பரையாகத் தொடர்வதும் உண்டு. இந்த அடிப்படை யிலேயே ஒழுக்கமுடைமை குடிமை - இழுக்கம் இழிந்த பிறப்பு என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் நிலத்திணைகளில் அடங்குகின்ற தெய்வங்கள் யாவும் சைவ ஆலயத்தில் தமிழர்களாள் எவ்வித வேறுபாடுகள் இன்றி வழிபடுவதுடன் தெய்வீக தமிழ் போற்றுகின்றது.

“மாயோன் மேய காடுறை யுலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”

தொழில்களை அடிபடையாக கொண்டு உருவாக்கப்பட்ட சாதிய முறமை சைவசமயத்தால் உருவானதல்ல தொழில்களை அடிப்டையாக கொண்டு கட்டி எழுப்பப்பட்ட சாதியத்தை கிறிஸ்தவ மிஷனரிகளால் அனுப்பப்பட்ட பாதிரியார்களான மாக்ஸ் முல்லர், ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி, ஜி யு போப், கால்டுவெல். ஆகிய சாதிய வாதிகளே சாதியத்தை தமிழர்கள் மீது திணித்தவர்கள் "

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் அவர்கள் பேசுகின்றாா் "சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி"

மக்களை "சாதி" என்ற முறையில் வைத்து பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம். நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர் என்ற ஒரு பிரிவும், நீதி, நெறிமுறை தவறி நடக்கும் இழிகுலத்தோர் மற்றொரு பிரிவும் ஆவர்.

நாங்கள் கோவிலில் வைத்து வணங்கும் ஆழ்வார்களில் , நாயன்மாா்களில்,சித்தா்களில் , ​ சிவன் அடியாா்களனைத்து அனைத்து தொழில்களும் செய்தவா்கள் உள்ளனர்.சாதியப் பிரச்சனை சைவசமயத்தால் உருவானதல்ல.

கிறிஸ்தவ மிஷனரிகளால் அனுப்பப்பட்ட பாதிரியார்களான மாக்ஸ் முல்லர், ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி, ஜி யு போப், கால்டுவெல். ஆகிய சாதிய வாதிகளே சாதியத்தை திணித்தாா்கள்.ஆகவே சாதியத்தை தமிழர் உருவாக்கவில்லை என்பது என்பது புலனாகின்றது.

No comments:

Post a Comment