"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
எல்லா எழுத்துக்களும் அ ஒலியை முதலாக உடையன. அதுபோல உலகு ஆதிபகவன் ஆகிய இறைவனை முதலாக உடையது.இறைவன் ஆதியும் பகவுமாக இருப்பவன் தோன்று-நிலையிலும் தோன்றா-நிலையிலும் ஆதியாக இருப்பவன்.
👉🏿'குடிமக்களை ஆளும் இறைவனைத் திருவள்ளுவர்
ஆதி' எனக் குறிப்பிடுகிறார்.
👉🏿ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத்
திருக்குறள் குறிப்பிடுகிறது.
👉🏿-பண்ணிரு திருமுறைகள் இறைவனை
ஆதிபரன் , ஆதி பராபரம் , ஆதிப்பிரான், ஆதி அனாதி அகாரணி காரணி என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.
பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்
:👉🏿“ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே”
👉🏿“ஆதி பராபர மாகும் பராபரை
ோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்
ஓதுங் கலைமாயை யோரிரண் டோர்முத்தி
நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.”
👉🏿“ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று-எனார்
பேதிது உலகம் பிணங்குகின் றார்களே.”
மூன்றாம் திருமுறை
👉🏿“பந்து சேர்விர லாள்பவ ளத்துவர்
வாயி னாள்பனி மாமதி போன்முகத்
தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந்
நிறைந் துவலஞ் செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றுதுமே.”
👉🏿தமிழ் நீதி நூல். வெண்பாக்களால் கடவுள் வாழ்த்துப் பாடல்:
“ மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன்
நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் - ஆதிபரன்
வாமான் கருணை மணிஉதரம் பூத்தமுதல்
கோமான் பெருங்கருணை கொண்டு.
👉🏿இந்திரன் யார்? ஹாமத்துறுவா?
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி"
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறார்.
ஆதி என்றால் முதல் நிலை மூல நிலை இருப்பு நிலை என்று பொருள்.
இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பு இருந்த நிலை - ஆதலால் முதல் நிலை என்றும்,இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பதால் - மூல நிலை என்றும்,இந்த உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்து ஆண்டு கொண்டு இருப்பதால் - இருப்பு நிலை என்றும்,இந்த மூன்று அர்ததங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு, இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு, அதாவது இயக்க நிலை தோன்றுவதற்கு முன்பு இருந்த காரணத்தினால் - ஆதி என்றும் அழைக்கப் படுகிறது.
பகவன் என்றால் :-
இலகு பகு என்று இரண்டு வடமொழிச் சொற்கள் உள்ளன இலகு - என்றால், சிறிய எளிய என்று பொருள் பகு - என்றால், பெரிய மதிப்புமிக்க என்று பொருள் பகு + அவன் = பகவன் அதாவது பகவன் என்றால் பெரியவன் மதிப்பு மிக்கவன் என்று பொருள். பகவன் என்பது இறைவன் மிகப் பெரியவன் என்பதைக் குறிக்கிறது.
குடும்ப அளவில் பெரியவன் என்றால் எல்லோரையும் விட மூத்தவன் என்று பொருள்.உலக அளவில் பெரியவன் என்றால் உலகில் உள்ள அனைத்திற்கும் மூத்தவன், மூலநிலை என்று பொருள் அந்த மூலநிலையைத் தான் பகவன் என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.
No comments:
Post a Comment