Followers

Wednesday, 11 August 2021

அல்பிரட் துரையப்பா-

 அல்பிரட் துரையப்பா கிறிஸ்தவ  இனத்தில்  இருந்து விலகி தமிழராக மாறியதன் காரணமா கொதி நிலையில் இருந்த  உலகத் தமிழாராய்ச்சிக் கழக நிறுவனரும் கத்தோலிக்க மதத்தின் யாழ்பாண அழிப்பாளருமாகிய சேவியர் தனிநாயகம் அடிகளார் அரசியலின் ஊடாக மேற்கொண்ட நகர்வே அல்பிரட் துரையப்பா துரோகி என்பததாகும் . .

அல்பிரட் துரையப்பா இலங்கை நாடாளுமன்றத்திற்காக மார்ச் ௧௯௬0 இல் நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அதே ஆண்டு சூலை மாதத்தில் நடந்த மறு தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.௧௯௭0 தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். பின்னர் இவர் இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்தார். யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக நியமிக்கப்பட்டவர் பலமுறை மேயராகவும் பதவி வகித்த பிரபலமான மனிதர் . தமிழர்களின் நம்பிக்கைக்குரிய நேர்மையான அரசியல்வாதி.

யாழ்ப்பாண தொகுதியில்மக்கள் தங்கள் வாக்குகளை   அல்பிரட் துரையப்பாவுக்கே செலுத்தினாா்கள். மிகுதியான வாக்குகள்  சிதறடிக்கப்பட்டு தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி என்பனவற்றுக்கு இடையில் சமமாகப் பிரிபட்டு வந்துள்ளன இதன்காரனமாக இரு கட்சிகளும் கொதி நிலையில் இருந்தன.

 அரசியலில் சிறந்த உதாரணமாக அல்லது கொள்கை வாதியாக தன்னை பிரதிநிதிப் படுத்துவதற்காக அவர் விண்ணப்பம் செய்வதற்கான தேவை எதுவும் இருக்கவில்லை. அவர் தனது தொகுதி மக்களை தனிப்பட்ட முறையில் தனித்தனியாக நன்கு அறிவார், மற்றும் ஒவ்வொருவரும் அவரைத் தன் குடும்பத்தில் ஒருவராக உணரும் விதத்தில் நடக்க முயற்சித்தார். அவர் வீதிகளில் மக்களைச் சந்திக்கும்போது அவர்களுக்கு வாழத்துச் சொல்லி அவர்களது படிப்பு மற்றும் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாக விசாரிப்பார். சாதாரண வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு வேண்டிய மக்களின் தேவைகளை அவர் பூர்த்தி செய்துவந்தார். வேலைகள், இடமாற்றம், சந்தைக் கட்டிடம், பொதுக் கழிப்பறைகள் மற்றும் தெரு விளக்குகள் போன்றவற்றை அவர் நிறைவேற்றி வந்தார். அவரது அரசியல்  பணிக்கு   அரசாங்கத்தின் புரவலர்தன்மை பொருத்தமாக இருக்கும் என்பதினால் அவர் தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.

யாழ்ப்பாணத் தொகுதிக்கு வெளியே தன்னைக் காட்டிக்கொள்ள முனைப்புக் காட்டியதில்லை, ஆனால் அந்த கௌரவமான தொகுதியில் தேசியவாதிகளான தமிழரசுக் கட்சிக்கும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்  கட்சிக்கும் ஒரு வலிமையான சவாலாகத் திகழ்ந்தார். அவர் கணிசமானளவு வணிகர்கள், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினரையும் மற்றும் நகரில் உள்ள வறிய மக்களையும் கொண்ட ஒரு வாக்கு வங்கியை தனதாக்கி வைத்திருந்தார். துரையப்பாவின் இந்த புகழ் போலி தமிழ் தேசிய வாதிகளுக்கு   எரிச்சலை மூட்டியது. தேசத்தை பற்றிய சில தெளிவற்ற யோசனைகளை கடைப்பிடிப்பதற்காக, மக்கள் தங்கள் சாதாரண தேவைகள் மற்றும் வாழ்க்கையின் விருப்பங்கள் அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக உள்ள ஒரு பொய்யான தோற்றம் உடைய யாழ்ப்பாணத்தின் உயர்வான ஒரு சமூகத்தின்மீது அவர்கள் அந்த தேசியவாதத்தை திணிக்க முற்பட்டார்கள். இந்த பாசாங்குத் தனத்தை துரையப்பா பகிரங்கப் படுத்தினார்.

1972 ல் தமிழரசுக்கட்சி துரையப்பாவை துரோகி, மற்றும் சாவதற்கே லாயக்கானவர் என அழைத்து அவர்மீது திட்டமிட்ட தாக்குதல்களைத் தொடங்கியது. அதேபோன்று கத்தோலிக்க மதம் இவரது கிறிஸ்தவ  இன துறப்பை பழிதீா்க தமிழரசு கட்சி தன் கைவரிசையை பலப்படுத்திக் கொண்டது.

ஆரம்பத்தில் அது யாழ்ப்பாண தொகுதியை வெல்வதற்கான ஒரு சிறு சண்டை போலவே இருந்தது. ஆனால் அவர்கள் அதிகம் வலியுறுத்தியது போல, தாங்கள் நினைப்பதுதான் சரியானதும் மற்றும் இயற்கையானதும் அவரது முடிவும் அப்படியே நடக்கவேண்டும் என செயல்படதொடங்கினார்கள். 

தமிழாராய்ச்சி மாநாட்டின் அரசு சார்பு பிரதிநிதிகள் கொழும்பில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டனர். ஆனாலும் அரசின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையிலான குழு தீர்மானித்து அதன் படி ௧௯௭௪ சனவரி ௩-௯ காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடாத்துவதற்கு பொலிஸ் அனுமதியும் பெறப்பட்டது.

மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய நாள்  09 ஜனவரி1974ஆண்டு ஆகும்.   மறுநாள்  ஜனவரி 10ஆம் நாள்  1974  ஆண்டு  பொலிஸ் அனுமதியின்றி  கலவரத்தை உருவாக்கும் பெரும் சதி வலைபின்னலுடன் பரிசளிப்பு விழாவும் விருந்தினருக்கு உபசாரமும்   நடாத்துவதற்கான ஒழுங்குகள்  செய்யப்பட்டது. 

 ஜனவரி 10ஆம் நாள் 1974   ஆண்டு   கூட்டம்  அனுமதி பெறப்படாமல் கூட்டப்பட்டது.    சட்டவிரோதமானது என்று சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு  பிரகடணம் செய்து பொலிஸாரை அனுப்பி  கூட்டம்  அனுமதி பெறப்படவில்லை ஆகவே அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறியது.

 உடனே எழுந்தாா்  சேவியர் தனிநாயகம் அடிகளார் நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம் வீரமறவர்கள் இங்கு கூடியிருக்கின்றாா்கள் அவர்கள் எதற்கும் அஞ்சமாட்டாா்கள்  மறவர் கூட்டமே எழுக என்று கூறி தமிழ் இளைஞர் பேரவையை சேர்ந்த இளைஞர்களுக்கு உசுப்பேத்தி விட்டாா்.  உடனே அங்கு கூடியிருத்த  தமிழ் இளைஞர் பேரவையை சேர்ந்தவர்கள் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை சிறிமா அரசுக்கும் அதன் கூலிபடைகளுக்கும் உரக்க சொல்வோம் என்று கூறிக் கொண்டு முதலில் செருப்பால் பொஸிசாரை நோக்கி எறிந்து கலவரத்தை உருவாக்கினாா்கள்.

காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன பல தமிழர்களின்  மரணங்களுக்குக் காரணமாயின. 

 உடனடியாக தமிழரசு கட்சியினர் அல்பிரட் துரையப்பா இந்த அட்டூலியத்தை செய்வித்தவர் அவர் தமிழ் துரோகி என்று முழக்கம் இட்டனர். இதற்கு மேலே  ஒருபடி ஏறி நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு அமைப்பாளரும் அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனருமான   வண. சேவியர் தனிநாயகம் அடிகளார் துரையப்பா அழிக்கப்படல் வேண்டும் என்று கூறி தமிழ் இளைஞர் பேரவையை சேர்ந்த இளைஞர்களுக்கு உசுப்பேத்தி விட்டாா்.  

10 ம் திகதி ஜனவரி மாதம்1974  இல் மாநாடு நடைபெற்றது சர்வதேச தமிழராய்ச்சி மாநாடு  அல்ல சட்டவிரோதமான முறையில் பொலிஸ் அனுமதியின்றி துரையப்பாவை இழிவுபடுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைக்கப்பட்டிருந்தது .இந்த இழிபடுத்தும் நிகழ்ச்சி நிரலை நெறிப்படுத்தியவர் உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிறுவனர் கிறிஸ்தவ மதபோதகர் தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் என்பவரே ஆகும்.

10 ம் திகதி ஜனவரி மாதம்1974  ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலவரங்கள், குழப்பங்கள், உயிா் இழப்புகளுக்கு    யாழ்ப்பாணத்தில்  நடைபெற்ற கலவரங்கள், குழப்பங்கள், உயிா் இழப்பு போன்ற துயர சம்பவங்கள் ஏற்பட அல்பிரட் துரையப்பா தான் காரணமாக இருந்தார் என்பதற்கு ஒரு துளி ஆதாரம்கூட இல்லை. 

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 0௯ ௧௯௭௪ திகதிவரை இலங்கை பொலிஸ் அனுமதிவழங்கி இருந்தது. 

10 ம் திகதி ஜனவரி மாதம்1974 இலங்கை பொலிஸ் அனுமதி  பெறப்படாமல்   தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் என்று போலியான பெயரை சூட்டிகலவரத்தை உருவாக்கும் நோக்கில் நடாத்தப்பட்டது. மகாநாட்டு நிகழ்ச்சி நிரலில் இருந்து தெளிவாக அறியக்கூடியதாக இருந்தது.

 ஆனால். அவர் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் நகரபிதாவாக இருந்தபடியால் இந்தச் சம்பவத்திற்காக அவரை சேவியர் தனிநாயகம் அடிகளார்  பலிக்கடாவாக்கினாா்.ஆனால் சர்வதேச தமிழராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற கலவரங்கள், குழப்பங்கள், உயிர் இழப்புகளுக்கு கிறிஸ்தவ சொலமன் வெஸ்ட்ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்காவின் மனைவியான சிறிமா அம்மையார்தான் காரணமானவர் என்பதனை மறைத்தாா்கள்.

 இந்த துயரத்துக்கும் மற்றும் பொதுமக்களின் மரணத்துக்கும் துரையப்பாதான் பொறுப்பு எனக் குற்றம்சாட்டிமேலும் வெறுப்பை உருவாக்கி திறமையான பிரச்சார நடவடிக்கைகளை சேவியர் தனிநாயகம் அடிகளார் அரசியலின் ஊடாக மேற்கொண்டாா். இது பிணங்களின் மேல் நடத்தப்படும் ஒரு மத அரசியல் நடவடிக்கையாக மாற்றினாா்.

வெள்ளிக்கிழமை மாலைவேளையில் அவரது வழமையான நிகழ்ச்சிப்படி, பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு இரண்டு தோழர்களுடன் காரில் வந்திறங்கியபோது, 27 ம் திகதி ஜூலை மாதம் 1975 ம் ஆண்டு துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.

எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் கலை கலாச்சார பண்பாடுகளின் எழுச்சியாக எம்கண்முனனே எழுந்து நிற்கின்ற ஆலயத்தை மாசுபடுத்துவதன் மூலம் சிதைத்து அழிப்பதன் ஊடாக தமிழர்களை அழிக்க முடியும் என்ற சதிநோக்குடன் திட்டம் தீட்டி சேவியர் தனிநாயகம் அடிகளார் செய்து முடிக்கப்பட்டதே இந்த ஆலயவாசல் படுகொலை ஆகும்.

அல்பிரட் துரையப்பாவை கொலை செய்ய வேண்டும் என்றால் புணித பிரதேசம் அற்ற வெளியில் செய்து இருக்க முடியும். அவரது வீட்டு வாசலில் தெருக்களில் சுட்டு படுகொலை செய்து இருக்க முடியும், 

சைவ நெறி நிராகரிப்பாளர்களான தமிழீழ விடுதலை போராட்ட அமப்புகள் பல படுகொலைகளை சைவ ஆலய வாசல்களிலே மேற்கொண்டாா்கள் கிறிஸ்தவ  Cஹுர்ச்ஹ் வாசல்களில் ஒன்றும் நடைபெறவில்லை இதற்கு காரணம் இவர்களை நெறிபடுத்தி, வழிபடுத்தியவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள் என்பதனால் ஆகும்.  அல்பிரட் துரையப்பாவிற்கு பிற்பாடு யாழ்பாணம் அழிவையே சந்தித்து . யாழ்பாணம் சுடுகாடாக மாறி இருந்தது. இதற்கான முழுப்பொறுப்புகளும் கததோலிக்க மதத்தையே சாரும். இதனை யாரும் மறுக்க முடியாது.

    அருளகம்.  

No comments:

Post a Comment