Followers

Tuesday, 10 August 2021

சைவ ஆலயங்களுக்குள் சாதியம் இல்லை.

 சாதியம் அற்ற சமத்துவமான வாழ்வியல் நெறிகளை கொண்ட  தமிழர்களின் ஆலயங்கள் என்பதனை அதன் கட்டமைப்புகள் மூலமாக தெரிந்து கொள்ள முடியும். 

 * பூ உற்பத்தி செய்பவர் * மாலையாக கட்டுபவர்   * அதனை விற்பனை செய்பவர்  * அர்ச்சகர்  * அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்  * கோயில் காவலாளிகள்,  * தேங்காய் உற்பத்திசெய்பவர்,   * தேங்காய் விற்பனைசெய்பவர்.  *  ஊதுபத்தி உற்பத்தி செய்பவர்  * அதனை விற்பனை செய்பவர்கள்  (மொத்தமாகவும் சில்றையாகவும்,)  * கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள்,           *அதனையும்   மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள்.

 * சந்தனம்,குங்குமம், பழவகைகள்,ஆகியவற்றை உற்பத்திசெய்தும் விற்பனை செய்பவர்கள்  * பூஜைத்தட்டுகளை உற்பத்திசெய்பவர்கள் , விற்பனைசெய்பவர்கள்,  * வாழைமரம் வளர்ப்பவர்கள்  * அவற்றை விற்பனை செய்பவர்கள்,  * கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள்,  * இதில் மாற்றுமதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

 * வாசலில்அல்லது அதைச்சுற்றி யாசகம் செய்பவர்கள்  * கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள்  * அதன் ஓட்டுனர்கள்  * கோவிலை நேரத்துக்குநேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள்  * மடப்பள்ளியில்,(சமையலறையில் சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்)  * தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள்.  * கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர்தொடக்கம்   முகாமையாளர் வரை  * உண்டிலில் சேரும் பணத்தினை எண்ணுபவர்கள்  * ஓதுவார்கள்,  * நாதஸ்வர,தவில் கலைஞர்கள்  * ஒலி, ஒளி அமைப்பாளர்கள்  * சிற்ப கலைஞர்கள்  * ஓவியர்கள்  * கட்டட கலைஞர்கள்  * ஆசாரிமார்கள்.    

 *விசேட காலங்களில் தொழில்புரியும் மேலதிகக்காவலர்கள்,  *விசேட காலங்களில்அறுசுவை உணவுகளை தயாாித்து அடியாா்களுக்கும் ஆலயங்களில் வேலை செய்பவர்களுக்கும் உணவளிப்பவர்கள் , இறைைவனின் அலங்கார உடுப்புகள் நெய்வதற்கு  கலைஞர்கள் உருவாக்கப்பட்டனர். 

* இறைைவனின் ஆடைகளை  துவைக்க தொழில்கள் உருவாக்கப்பட்டன. *கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ளவதற்கு பெருமளவு வேலை வாய்புகள் ஆலயங்களினால் வழங்கப்பட்டன. 

இவைகள் அனைத்தையும் நிர்வாகம் செய்வதற்கும் வரவு செலவுகள் கணக்குகள் பேணிபராமரிப்பதற்கும் என்று பெருமளவு மக்களுக்கு வேலைகள் வழங்கப்பட்டன.* மேலும் பல தொழில்கள் அடங்குகின்றன.

சைவ ஆலயங்களின் மூலமாக பல இலட்சக்கணக்கான தமிழர்கள் தங்களின் வாழ்வுக்குரிய வருமாணங்களை பெற்றனா்.இதனால் அவர்களின் வாழ்வு மலர்ந்திருந்தது.

 ஐரோப்பியர்கள் ஆக்கிரமிப்பினால் ஆலயங்கள் சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்களாள் ஆலயங்களில் இயங்கி வந்த தொழில்கள் சாதியங்களாக மாற்றப்பட்டு தமிழர்கள் பிளவுபடுத்தப்பட்டாா்கள்.

தமிழர்கள் தொழில் அடிபடையிலோ அல்லது சமூகத்தின் கட்டமைப்பின் அடிபடையிலோ சாதியம் வகுக்கப்படவில்லை. தொல்காப்பியரின் இலக்கியத்திலும் சாதியம் இல்லை. சமத்துவவாத அடிப்படையில்தான் ஆலயங்கள் தமிழர் சமுதாயத்தை வழிநடாத்தியது.

 ஐரோப்பியர்கள் ஆக்கிரமிப்பினால் ஆலயங்கள் சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்களாள் ஆலயங்களில் இயங்கி வந்த தொழில்கள் சாதியங்களாக மாற்றப்பட்டு தமிழர்கள் பிளவுபடுத்தப்பட்டாா்கள்.மீண்டும் ஆலயங்களை தமிழ் சமுதாயத்தை வழிநடாத்துகின்ற தலைமைத்துவமாக மாற்றி அமைத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment