தமிழர் கலாச்சாரம் என்பது தமிழ் சமூகத்தை நல்வழியில் கொண்டு போக உதவும் ஒரு வழிகாட்டி முறையே ஆகும் .வாழ்ந்து காட்டி வழிகாட்டும் முறை என்றால் மிகை இல்லை.. குடும்பம் என்பது சிறிய சமூகம் ,சமூகம் என்பது ஒரு பெரிய குடும்பம் .தனி மனிதர்கள் குடும்பத்தில் எப்படி நடக்கின்றார்களோ அதுவே சமூக விளைவாக பரவும் .சமூகத்தில் பரவும் விளைவுகள் யாவும் ஒவ்வொரு தனிமனிதனையும் பாதிக்கும். இவ்வாறான வாழ்க்கையில் மொத்த மனித கூட்டத்தையும் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்ககாவே தமிழை அருளிய இறைவன் தமிழுக்கு என்று அருளியது "தமிழ் கலாச்சார பாரம்பரியம் தமிழ்தேசியத்தின் அடையாளமாகும்".
கலாச்சாரம் என்றால் சைவசமய அடையாளங்கள் என்றும் அவ்வாறான அடையாளங்கள் மூட நம்பிக்கைகள் என்றும் பலருக்கு போதிக்கப்பட்டதோடு தொடர்ந்தும் போதிக்கப்பட்டு வருகின்றது . தமிழர் கலாச்சாரம் என்பது பழைய பஞ்சாங்கம் என்றும்:மேலைத்தேய நாகரிகம் படி வாழ்வதே அறிவு என்றும் பரப்புபவர்கள் தமிழின கொலையாளிகள். இவா்கள் "நுனி கிளையில் உட்கார்ந்து கொண்டு அடி கிளையை வெட்டுபவா்கள்.
தமிழ் சமூகத்தில் பெண் என்பவர் மிகவும் முக்கியமானவர் .அதனால் தான் தமிழரிடம் பெண்களுக்கான மரியாதை மிகவும் அதிகம் . அதனாலேயே உடை, நடை,பாவனை என அனைத்திலும் ஒழுக்கமான விதிகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதனாலேயே தமிழர்கள் பெண்களை தெய்வமாக வணங்கி வருகின்றனர். இவ்வாறான அதி உன்னத நிலையை மறந்து தமிழர்கள் மேலைத்தேய நாட்டு மோகத்திட்குள் ஈர்க்கப்படுவது தமிழின அழிப்பு என்றே சொல்லலாம் .
ஒரு இனத்தை அழிக்க விரும்புவோர் முதலில் கையில் எடுக்கும் முயற்சி அந்த இனத்தின் கலாச்சாரத்தினையும் அதன் அடையாளங்களையும் அழிப்பதே ஆகும். இதனை செய்து விட்டால் மற்றவை அனைத்தையும் எளிதாக செய்து முடித்து விடலாம் என அறிந்தமையினாலேயே அந்த காலத்திலேயே தமிழ் மூதாட்டியான ஒளவையர் " தேசத்தோடு ஒத்து வாழ் " என கூறியுள்ளார்.
கவிஞர் ஒருவர் அழகாக சொல்வர் " பசு மாடும் தயை அம்மா என சொல்கிறது. பச்சை தமிழனோ மம்மி னு சொல்கிறான்" என்றார் . இந்த வார்த்தைகள் அவன் வாயில் வர அவனது எண்ணக் குமுறல்கள் எப்படி இருக்கும் என யோசிக்க முடிகிறது.
இன்றய தமிழர்கள் தங்கள் சிறு குழைந்தைகள் பள்ளிக்கு போகும் முன் பெற்றோர் சொல்லிக் கொடுக்கும் முதல் வார்த்தை கூட தமிழாக இருப்பதில்லை ,நம்மை அடிமையாகியவர்களின் மொழியை தான் உயர்வாக சொல்லி கொடுத்து கொண்டு இருக்கும் அதே வேலை வேற்று மொழி பேசுபவர்கள் தமிழை விரும்பி கற்பது தமிழின் பெருமையை சற்று பறை சாற்றுகிறது எனினும் நம்மவர் அதை பேச வெட்கிப்பதுதான் ஏன் என புரியவில்லை . அத்துடன் தமிழையும் ஆங்கில மொழியையும் ஒழுங்காக எழுத பேசத் தொியாத மூடா் கூட்டம் தெய்வீக தமிழுடன் ஆங்கிலத்தையும் கலந்து பேசி இரண்டு மொழிகளையும் கொலை செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.
தமிழ் கலாசாரத்துள் பெண்கள் கேலி பொருளாக சித்தரித்து வருவாதோடு பெண்களுக்கு உரிய தமிழ் கலாசார பண்புகளும் சீரழிக்கப்படுகின்றது.தமிழ் பெண்களுக்கே உரித்தான சேலை அணிதல் ,தலை வாரி பூ சூடுதல் ,நெற்றியில் குங்கும திலகம் இடுதல் ,கையில் வளையல்கள் அணிதல் போன்ற அறிவியல் நிறைந்த கலாசார பண்பாடுகளை படிக்காட்டு தானம் என்று கூறி மேலைத்தேய மோகத்தை நம் தமிழ் பெண்களிடமும் விதைத்ததோடு மட்டுமன்றி தமிழரின் கலாசார பண்பாடுகளையும் கொலை செய்து வருகின்றனர். தமிழின் பெருமையை உலகறிய செய்து அதை நிலை நாட்ட வேண்டிய சிலரே தமிழ் கலாசாரத்தை சீரழிப்பது போன்ற செயல்களை செய்வது தமிழின அழிப்பி ஆகும் .இதட்கு உதாரணமாக
ஒஸ்லோ மாநகரத்தின் பிரதி முதல்வராக நியமிக்க பட்டுள்ள கம்சாயினி குணரெத்தினத்தினை கூறலாம் .தமிழ் தேசியத்தின் கலாசார பண்பாட்டு அடையாளங்களுடன் நன்றாக தமிழ் உச்சரிப்புடன் பேசுகின்ற, பாடுகின்ற வெள்ளை கார இனத்தவரின் மத்தியில் தமிழராக இருந்து கொண்டு தரித்திரம் பிடித்த தலை விரி கோலமும் , நெற்றியில் தமிழர் என்று அடையாள படுத்துகின்ற திலகமும் இல்லாமல் அரை குறை ஆடை அணிந்து கொண்டு தமிழை கூட சரியாக உச்சரிக்க தெரியாமல் ஆங்கிலம் கலந்து பேசி கொண்டு இருக்கின்ற கம்சாயினி குணரத்தினம் தன்னை தமிழின அழிப்பு செய்து கொண்டாா்.
உலகநாடுகளிள் வாழுகின்ற தமிழா்களின் பிள்ளைகள் ஆலய தொண்டுகள் செய்து கொண்டு தமிழ் கலை கலாச்சார பண்பாடுகளுடன் வாழுகின்றாா்கள். அத்துடன் நன்றாக தமிழ் பேசுகின்றாா்கள்.
No comments:
Post a Comment